தீப்பெட்டி கணேசன் உயிரிழப்பால் அவரது குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றுக் கொண்டுள்ளார் ராகவா லாரன்ஸ்.
Raghava Lawrence Helps to Theepetti Ganeshan Family : தமிழ் சினிமாவில் பில்லா 2, கண்ணே கலைமானே, கோலமாவு கோகிலா போன்ற படங்களில் நடித்திருந்தவர் தீப்பெட்டி கணேசன். அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்தார்.
கொரானா கால கட்டத்தில் தன்னுடைய குடும்பத்தை கவனித்து கொள்ள கூட பணம் இல்லாமல் இருந்து வருவதாகவும் தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். இதனையடுத்து நடிகர்கள் சிலர் அவருக்கு உதவி செய்தனர்.
இப்படியான நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இவர் உடல்நல குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் தற்போது ஆதரவில்லாமல் நிற்கும் தீப்பெட்டி கணேசனின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றுக் கொண்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
ராகவா லாரன்ஸின் இந்த உதவி பாராட்டுக்களை பெற்று வருகிறது.