Radika Sarathkumar Releave from Chithi 2

சித்தி 2 சீரியலில் இருந்து விலகுவதாக ராதிகா சரத்குமார் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Radika Sarathkumar Releave from Chithi 2 : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சித்தி 2. இந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ராதிகா சரத்குமார்.

தற்போது இவர் சீரியலில் இருந்து விலகுவதாக தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் சித்தி 2 ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் ஏற்கனவே ராதிகா சரத்குமார் தன் அரசியல் பணிகளில் முழு கவனம் செலுத்தப் போவதாக சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சமீபத்தில் சீரியல் நிறுத்தப்படும் என்ற வதந்தியும் பரப்பப்பட்டது. ஆனால் சித்தி 2சீரியல் நடிகை ஒருவர் சீரியல் தொடரும் என்றும் விரைவில் ராதிகா சரத்குமார் தொடங்குவார் என்றும் கூறியிருந்தார்.

இப்படியான நிலையில் அவர் சீரியலில் இருந்து விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராதிகா தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.