PV Sindhu win Gold Medal
PV Sindhu win Gold Medal

PV Sindhu win Gold Medal – சீனாவில் நடைபெற்ற உலக டூர் பைனல் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சிந்து தங்கம் வெற்று உள்ளார்.

உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையான சிந்து உலகின் 5-ஆம் நிலை வீராங்கனையும் மற்றும் முன்னாள் உலக சாம்பியனுமான ஜப்பான் நாட்டை சேர்ந்த நஜோமி ஒகுஹராவை எதிக்கொண்டார்.

இந்த போட்டி 1 மணி நேரம் நடைபெற்றது. தொடக்கம் முதலே போட்டி சூடுபிடித்து இருக்கவே ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

போட்டியில் சிந்து 21-19 மற்றும் 21-17 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் முன்னதாக சிந்து கண்ட தொடர் தோல்விக்கு அவர் முற்று புள்ளி வைத்தார்.

அதோடு மட்டும் இல்லாமல் இதே தொடரின் கடந்த சீசனில் இறுதி சுற்றில் தோல்வி அடைந்தார் சிந்து. ஆனால் இந்த முறை தங்கம் வென்று உள்ளார்.

இந்த ஆண்டில் சிந்து பெற்ற முதல் பதக்கம் இதுதான்.

மற்றும் முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் சிந்து எந்த வெற்றியும் பெறாத நிலையில் இந்த தங்கம் வெற்றி இருப்பது சிந்துவின் பாட்மிண்டன் வாழ்வில் முக்கியமானதாக இருக்கும்.

மற்றும் இந்த வெற்றியின் மூலம் சிந்து தனது 14- வது பட்டத்தை பெற்று உள்ளது முறிப்பிடதக்கது.

மேலும், இந்த போட்டியில் பட்டம் வெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தட்டி சென்றார் சிந்து.

இதனை தொடர்ந்து இந்திய பிரதமர், ஆந்திரப் முதல்வர் மற்றும் தெலுங்கான முதல்வர் ஆகியோர் சிந்துவின் இந்த வெற்றிக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.