Puppy First Look Controversy : Nithyanandha Notice to Yogi Babu | Puppy FL | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
ஆபாச நடிகருடன் நித்யானந்தாவை வைத்து வெளியாகி இருந்த பப்பி படத்தின் போஸ்டரால் யோகி பாபுவுக்கு நோட்டிஸ் அனுப்ப்பட்டுள்ளது.

Puppy First Look Controversy : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு, முன்னணி நடிகர்களுடன் மட்டுமில்லாமல் சோலோவாக காமெடி படங்களிலும் கலக்கு கலக்குவென கலக்கி வருகிறார்.

மேலும் இவர் தற்போது நட்டி தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள பப்பி படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இந்த போஸ்டரில் ஒரு புறம் ஆபாச நடிகர் ஜானி சின்ஸ் புகைப்படமும் மற்றொரு புறம் நித்யானந்தாவின் போட்டோவும் இடம் பெற்றிருந்தது. இதனால் பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன.

இந்நிலையில் சிவசேனாவை சேர்ந்த செல்வம் என்பவர் காவல் துறையில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில் ஆபாச நடிகருடன் நித்யானந்தாவின் போட்டோவை வைத்தது இந்து மத மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது.

இதனால் பப்பி படக்குழு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.