Pugazh in Thalapathy 65

தளபதி 65ல் புகழ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pugazh in Thalapathy 65 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் முதல் சீசன் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது சீசன் இறுதிக் கட்டத்தை நோக்கி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இதில் கோமாளிகளாக பங்கேற்ற புகழ் பாலா சிவாங்கி மணிமேகலை போன்றவர்களுக்கு என தனி ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகழ் தளபதி 65 இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.