Raj Kapoor
23 வயதில் இயக்குனர் ராஜ் கபூரின் மகன் ஷாருக் கபூர் மரணம் திரையுலக பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகரும் இயக்குனருமான ராஜ் கபூரின் மகன் 23 வயதில் உடல்நல குறைவால் மரணமடைந்துள்ளார்.

இவரின் மரணம் திரையுலகில் சோகத்தில் ஏற்படுத்தியுள்ள நிலையில் கலப்பை மக்கள் இயக்க தலைவரும் தயாரிப்பாளருமான பி. டி செல்வகுமார் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

இயக்குனரும் நடிகருமான ராஜ்கபூரின் மகன் ஷாருக் கபூர் தனது 23 வயதில் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். இந்த செய்தி கேட்டதும் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீள முடியவில்லை..

திரைத்துறையில் எல்லோருடனும் அன்புடனும் நட்புடனும் பழகக்கூடியவர் ராஜ்கபூர் அவர்கள். அவருடைய மகனுக்கு இப்படி ஒரு நிலைமை என்பதை கற்பனைக்கு கூட நினைத்து பார்க்க முடியாத வேதனை அளிக்கிறது.

இந்த நேரத்தில் மட்டுமல்ல எல்லா கஷ்ட நஷ்டத்திலும் திரைத்துறையினர் அவருக்கு உறுதுணையாக நிற்போம் என்று தெரிவித்து கொள்கிறேன் என அவருடைய இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

raj-kapoor-son