PT Selvakumar in Karthikai Deepam Function

கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக இயக்குனரும் தயாரிப்பாளருமான பிடி செல்வகுமார் மகா தீப பூஜை ஒன்றை நடத்தியுள்ளார்.

PT Selvakumar in Karthikai Deepam Function : நாட்டு மக்கள் கொரோனா பயம் நீங்கி சுகமாக சந்தோஷமாக வாழ வேண்டி
கன்னியாகுமரி மாவட்டம் பொட்டல் குளம் ஐயன் மலை குபேர ஐயப்ப சாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் பொட்டல் குளத்தில் குபேர மலையில் ஐயப்ப சாமி திருக்கோவில் உள்ளது. இங்கு உள்ள மூலிகை தியான மண்டபத்தில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி மாலையில் உடல்நல யோகாசனம், மனநிலை யோகாசனம் மற்றும் தியான பயிற்சி நடைபெற்றது. பின்னர் நாட்டு மக்கள் கொரோனா பயம் நீங்கி கொரோனாவிலிருந்து மீண்டு சுகமாக சந்தோஷமாக வாழ வேண்டி
திருவண்ணாமலையில் தீபம் ஏற்றுவது போன்று தென்தமிழகமான குமரி மாவட்டம் குபேர மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திரைப்பட தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவருமான பி.டி. செல்வகுமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் நாகர்கோவில் நகர்மன்ற தலைவி டி..எஸ் பொன் செல்வி கலந்து கொண்டு தீப ஒளியை ஏற்றி வைத்தார். அதற்கு முன்னதாக உடல்நல யோகாசனம் மனநல யோகாசனம் பிரணாயாமம் மற்றும் தியானப் பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சித்தர் எம் தியாகராஜன் சுவாமிகள் தலைமை வைத்தார் சுபஸ்ரீ பழனி குருசாமி குத்துவிளக்கேற்றி வைத்தார் யோகா ஆசிரியர் எம் கே கண்ணன் முன்னிலை வைத்தார்.

இந்நிகழ்ச்சியை பி டி செல்வகுமார் கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் மற்றும் புலி பட தயாரிப்பாளர் துவக்கி வைத்தார். தளத்தை மக்கள் இயக்க பொருளாளர் கிராம தான் அதிகம் கலப்பை மக்கள் இயக்க பொருளாளர் டி. ராம தாணுலிங்கம், கலப்பை மக்கள் இயக்க டி பாலகிருஷ்ணன், கலப்பை மக்கள் இயக்கம் மாவட்ட தலைவர் ஆர் சிவ பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர், ஜான் கிறிஸ்டோபர் இராஜேஸ்வரன் தீ ஸ்ரீரங்கன் பி லட்சுமண பெருமாள் பி குமார் உட்பட அனைவரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆன்மிக பக்தர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் பிடி செல்வகுமார் இந்த முயற்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழக மக்கள் கொரானா பயமின்றி நிம்மதியாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் மகாதீப பூஜையை ஏற்பாடு செய்த பிடி செல்வகுமார் அவர்களுக்கு மக்கள் பலரும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.