YouTube video

PT Selvakumar Helps to Poor Peoples : கொரோனா வைரஸ் உலகத்தையே அசச்சுறுத்தி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் தலைவர் PT செல்வகுமார் தொடர்ச்சியாக 65 நாட்களாக உதவி செய்து வருகிறார்கள்.

இன்று குமரி மாவட்டத்தில் மேடை கலைஞர்கள், இசை கலைஞர்கள், சமையல் தொழிலாளர்கள், பந்தல் செட் அமைப்பவர்கள், தையல் தொழிலாளர்கள் 108 பேருக்கு அரிசி மூட்டைகள் மற்றும் தரமான காய்கறிகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு தளவாய் சுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார்.

பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரு. தளவாய் சுந்தரம் பேசியதாவது ; இந்த இக்கட்டான சூழ்நிலையில் குமரி மக்களுக்கு உதவி செய்து வரும் கலப்பை மக்கள் இயக்கத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன்.

குமரி மண்ணின் மைந்தராக பிறந்து ஏழைகளுக்கு அவர் செய்யும் தொண்டினை நினைத்து சந்தோஷப்படுகிறேன். என்னுடைய தேர்தல் நேரத்தில் என்னுடைய வெற்றிக்கு PT செல்வகுமார் பாடுபட்டார். என்னுடைய நீண்டகால நன்பர். தொடர்ந்து அவர்களுடைய சேவைக்கு எப்போது அழைத்தாலும் உறுதுணையாக இருப்பேன். நீண்ட ஆரோக்கியத்தோடு அவர் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறினார்.

மதம், இனம் ,ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு கலப்பை மக்கள் இயக்கம் சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக குமரி மண்ணில் சமத்துவ பொங்கல், 58 பசுக்களுடன் கோ பூஜை போன்றவற்றை நடத்தினோம்.

புகைப்பட கலைஞர்களுக்கு உதவிய கலப்பை மக்கள் இயக்கம் தலைவர் PT.செல்வகுமார்!

தற்போது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்த கலைஞர்களுக்கு குமரி மண்ணிற்கு பெருமை சேர்க்கக்கூடிய வள்ளல்தன்மை கொண்ட தளவாய் சுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு வழங்கியது அனைவருக்கும் உற்சாகம் தருகிறது .குமரி மக்களின் குரலாக டெல்லியில் ஒலித்துக் கொண்டிருக்கிறார்.

நாங்கள் இந்த நிகழ்வுக்கு அழைத்ததும் உடனடியாக எப்போது வரவேண்டும் என்று பெருந்தன்மையோடு கேட்டார். அவர் இதை போன்று பண்போடும், அதிகாரத்தோடும், நீண்ட ஆயுளோடு இருக்க இறைவனை வேண்டுகிறோம் என்று பேசினார்.

பின்னர் மக்கள் அனைவருக்கும் சத்து மாத்திரை வழங்கப்பட்டது. முகக்கவசத்தோடு சமூக விலகலை கடைபிடித்து அனைவரும் இன்முகத்துடனும் நெகிழ்ச்சியுடனும் பெற்று கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு உறுதுணையாக மாடன் பிள்ளை தர்மம் பஞ்சாயத்து தலைவர் பால்வண்ணன், வேல்ஸ் உரிமையாளர் அழகுவேல், குமரி நெல்லை கலப்பை பொறுப்பாளர் கார்த்திக் ராஜா, காணிமடம் சிவபண்ணீர் செல்வம், வேல்ஸ் பாக்கியராஜ் ,பால்குளம் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.