Protest against BJP
Protest against BJP

Protest against BJP – டெல்லி: நாடு முழுவதும் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 10 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தமிழக எல்லையில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசுக்கு எதிராக வங்கி ஊழியர்கள், போக்குவரத்து துறையினர், 10 தொழிற்சங்கத்தினர், மருத்துவம், தொலைத் தொடர்பு துறையினர் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், நாளையும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த போராட்டத்தில் 20 கோடி பேர் பங்கேற்க உள்ளதாகவும், டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதால் வங்கி சேவை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், ‘தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், ஸ்டிரைக்கில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்’ என்றும் தலைமை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் தமிழக எல்லையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.