Producers Request to Top Hero's
Producers Request to Top Hero's

பெரிய நடிகர்கள் தங்களது சம்பளத்தை பாதியாக குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

Producers Request to Top Hero’s : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் இந்த வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

அனைத்து துறைகளும் முடங்கியுள்ளது போலவே சினிமாத்துறையும் முடங்கியுள்ளது. இதனால் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சினிமா டிக்கெட் விலை அதிரடி குறைப்பு – முழு விவரம் இதோ.!

இதிலிருந்து மீண்டு மீண்டும் சினிமா பழையபடி புத்துயிர் பெற நடிகர்கள் தங்களது சம்பளத்தை பாதியாக குறைக்க வேண்டும் என கோரிக்கைகள் இருந்து வருகின்றன.

இதனால் ரூபாய் 100 கோடி சம்பளம் வாங்கும் டாப் ஹீரோக்கள் என்ன செய்யப் போகிறார்கள்? தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று சம்பளத்தை கொடுப்பார்களா மாட்டார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தயாரிப்பாளர்களின்தயாரிப்பாளர்களின் இந்த கோரிக்கை தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி என அத்தனை மொழிகளிலும் எழுந்துள்ளது.