கொரோனா வைரஸ் தொற்றால் பிரபல தமிழ் பட தயாரிப்பாளர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Producer Muthukumaran Passes Away : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றிய உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தியது. அதிலும் குறிப்பாக தற்போது இந்தியாவில் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. சாதாரண மக்கள் முதல் திரையுலகப் பிரபலங்கள் வரை பலரும் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக வடமாநிலங்களில் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்து வருவது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்த்திரையுலகிலும் எஸ்பி பாலசுப்ரமணியன் முதல் கே வி ஆனந்த் வரை பல திரையுலக பிரபலங்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளனர்.

கே வி ஆனந்த் மரணத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் யாக்கை என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்த முத்துக்குமரன் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த தகவலை நடிகர் கிருஷ்ணா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு முத்துக்குமரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் அடுத்தடுத்த மரணம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.