Producer Michael Rayappan Blast Speech Against T Rajendar and STR

YouTube video

T Rajendran About Eeshwaran Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு இவரது நடிப்பிலும் சுசீந்திரன் இயக்கத்திலும் வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஈஸ்வரன்.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க, பாரதிராஜா, நந்திதா ஸ்வேதா, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படம் பொங்கலுக்கு விருந்தாக நாளை மறுநாள் வெளியாக இருந்தது. இருப்பினும் நாளை தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் வெளியாவதால் ஈஸ்வரன் திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

திரையரங்கு உரிமையாளர்களும் ஈஸ்வரன் படத்தை வெளியிட மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து சிம்புவின் தந்தையான டி ராஜேந்திரன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் என் மகனின் “ஈஸ்வரன்” படம் வெளியாக ஏற்கனவே திட்டமிடப்பட்டது எனவும், மாஸ்டர் படத்திற்காக ஈஸ்வரனுக்கு எதிராக சதி செய்கிறார்கள் எனவும், வேதனையுடன் தெரிவித்துள்ளார்.