Producer KE Gnanavel Raja Clarification on Complaint
Producer KE Gnanavel Raja Clarification on Complaint

ரூபாய் 300 கோடி மோசடி செய்ததாக வெளியான புகாருக்கு ஞானவேல் ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

Producer KE Gnanavel Raja Clarification on Complaint : தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் களில் ஒருவராக வலம் வருபவர் ஞானவேல்ராஜா. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் மூலமாக தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.

இவர் தூசி மணிகண்டன் என்பவரிடம் ரூபாய் 300 கோடி மோசடி செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் நீதி மணி என்பவர் என்னுடைய தயாரிப்பில் உருவான மகாமுனி என்ற திரைப்படத்தின் தமிழக விநியோக உரிமையை 6 கோடியே இருபத்தி ஐந்து இலட்சத்திற்கு வாங்கி கொள்வதாக ஒப்பந்தம் செய்தார்.

ஒப்பந்தம் ஆனதைத் தொடர்ந்து அவர் 2 கோடியே 30 லட்சம் மட்டுமே செலுத்தியிருந்தார். மீதமுள்ள தொகையை பிறகு செலுத்துவதாக கூறினார். ஆனால் தற்போது வரை அவர் செலுத்தவில்லை.

இந்த நிலையில் திரு நீதிமணியும் அவரின் கூட்டாளிகளும் ரூபாய் மூன்று கோடி மோசடி செய்துவிட்டதாக திரு துளசி என்பவர் புகார் அளித்துள்ளார்.

ஜாதி பெயரை கூறி கிண்டலடித்த ரசிகர் – அசிங்கமான வார்த்தையால் திட்டி பதிலடி கொடுத்த ரித்திகா

அவர் நீதிமணி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது மட்டும் தான் புகார் அளித்துள்ளாரே தவிர அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் சில பத்திரிகைகள் இந்த தகவலை தவறாக திரித்து நான் 300 கோடி மோசடி செய்ததாக செய்தியை வெளியிட்டு என்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி வருகின்றனர். எனக்கும் நீதி மணிக்கும் மகாமுனி வியாபாரத்தை தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை என தெளிவுப்படுத்தி கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இது போன்ற தவறான செய்திகளால் நானும் என் குடும்பமும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இதுகுறித்து யாரும் எங்களிடம் எந்தவித விளக்கமும் கேட்கவில்லை.

தயவு செய்து இனி தவறான செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அப்படியும் மீறி வெளியிட்டால் சம்பந்தப்பட்ட பத்திரிகை மீது வழக்கு தொடர்வேன், மேலும் மான நஷ்ட ஈடு கேட்பேன் என எச்சரித்துள்ளார்.