Producer Dhananjayan About Suriya

சூர்யா நடித்த 24 படமும் ஹிட்டு தான் என பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Producer Dhananjayan About Suriya : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரையுலகப் பிரபலங்கள் பலரும் படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் நமக்கு அளித்த பேட்டி ஒன்றில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் மற்றும் அவருடைய திரைப்பயணம் குறித்து பேசியுள்ளார்.

சூரரைப்போற்று படத்தில் சூர்யாவின் உழைப்பு மிகவும் அதிகம், அது பாராட்டப்பட வேண்டிய ஒன்று என தெரிவித்துள்ளார்.

மேலும் சூர்யா நடித்த 24 படங்கள் வணிகரீதியாக வெற்றி பெற்ற படங்கள் தான். அவர் தமிழ் சினிமாவின் டாப் 3 நடிகர் என நான் பலமுறை கூறியுள்ளேன் என பேசியுள்ளார்.

மேலும் தளபதி விஜய் மற்றும் அஜீத் ஆகியோர்களை போல சூர்யாவிற்கு என தனி ஸ்டைல் உள்ளது. வெற்றி தோல்வி என எது வந்தாலும் இவர்கள் மூவரையும் அசைக்கக் கூட முடியாது என தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் பேசியுள்ளார்.

அவர் நமக்கு அளித்த பேட்டியின் முழு வீடியோ இதோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.