Master Release

திரையரங்குகள் திறக்கப்பட்டால் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆகாது என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Producer Dhananjayan About Master Release : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க எக்ஸ்பி பிலிம் கிரேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் உலகம் முழுவதும் மக்கள் ஒன்பதாம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் குரோனா வைரஸ் தாக்கம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய் வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அக்டோபர் 20ஆம் தேதி தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்ஜெயன் அவர்கள் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மாஸ்டர் திரைப்படம் வெளியாகாது என கூறியுள்ளார்.

தற்போது 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்படும். இந்தக் கட்டத்தில் மாஸ்டர், ஜகமே தந்திரம் போன்ற பெரிய படங்களை ரிலீஸ் ஆனால் நிச்சயம் தயாரிப்பாளருக்கு நஷ்டம் தான் ஏற்படும்.

தற்போதைய சூழ்நிலையில் சிறிய பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்தால் தான் ஓரளவுக்கு லாபம் பார்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.