Producer Council Election Results

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நேற்று நடந்து முடிந்த நிலையில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிந்துள்ளது.

Producer Council Election Results : தமிழக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் விஷால் தலைமையில் செயல்பட்டு வந்த நிலையில் அவர் அதிக அளவில் ஊழல்கள் செய்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இது குறித்த பிரச்சனை தொடர்ந்து சென்று கொண்டிருந்த நிலையில் நேற்று ஒரு வழியாக தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடந்து முடிந்தது.

தயாரிப்பாளர் சங்க தலைவருக்கான போட்டியில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, டி ராஜேந்தர், தேனப்பன் ஆகியோர் போட்டியிட்டனர்.

மொத்தம் 1050 ஓட்டுக்கள் பதிவான நிலையில் இவர்களில் யார் யாருக்கு எவ்வளவு ஓட்டு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

முரளி – 557
டி ராஜேந்தர் – 388
தேனப்பன் – 88
செல்லாத ஓட்டுக்கள் – 17

169 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முரளி வெற்றிவாகை சூடியுள்ளார். டி ராஜேந்தர் தோல்வியை தழுவியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.