தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வெற்றி பெற்ற கூட்டணியை செல்ல அவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்துள்ளனர்.

Producer Council EC Members With CM : தமிழகத்தில் திரைப்பட உலகை சார்ந்த தயாரிப்பாளர்களுக்கு என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என ஒன்று செயல்பட்டு வருகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் இருந்து வந்தார். இவர் மீது தொடர்ந்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

இவைகள் அனைத்தையும் தாண்டி ஒருவழியாக தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடந்து முடிந்த தலைவராக போட்டியிட்டு வெற்றிபெற்ற தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, துணைத் தலைவராக போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்கே சுரேஷ் உட்பட வெற்றி பெற்ற அனைத்து நிர்வாகிகளும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

Edappadi K Palanisamy

பதவி ஏற்றுக்கொண்ட தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இவர்கள் முதல்வரை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. தயாரிப்பாளர் சங்கத்தில் புதிதாக பதவியேற்ற நிர்வாகிகளுக்கு திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.