அரசாங்கமே மக்களை நாடி செல்கிறது ! - முதல்வர் பழனிச்சாமி பெருமிதம் | Tn Govt | Edappadi Palaniswami

Problem Solution Number in Tamilnadu : தமிழகத்தில் அரசு அதிகாரிகள் நேரிலேயே சென்று மக்களின் குறைகளை தீர்க்கும் நிலையை அ.தி.மு.க அரசு ஏற்படுத்தி தந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

EPS in Modern Problem Solve Scheme

அங்கு திரளாக கூடியிருந்த மக்களிடம் உரையாற்றிய முதலமைச்சர் நவீன விஞ்ஞான உலகத்தில் பொது மக்கள் எளிதில் தங்களின் குறைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் 1100 என்ற எண் மூலம் குறைகளை தெரிவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முதலமைச்சரின் குறைதீர் திட்டத்தின் மூலம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் பெறப்பட்ட சுமார் 9 லட்சத்து 77 ஆயிரம் மனுக்களில் 55 லட்சத்து 25 ஆயிரம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் முதலமச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.