Priya Bhavani Shankar Loves to Madhavan

நூறாவது முறை மாதவனிடம் ஐ லவ் யூ என கூறியுள்ளார் பிரபல நடிகை. இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Priya Bhavani Shankar Loves to Madhavan : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மாதவன். அலைபாயுதே படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமா படங்களிலும் மாஸ் காட்டி வரும் மாதவன் நடிப்பில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான திரைப்படம் மாறா.

மாதவனும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் இணைந்து நடித்து வரும் இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த படம் பற்றி அவர்களது விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரியா பவானி சங்கரும் தற்போது தன்னுடைய விமர்சனத்தை பதிவு செய்துள்ளார்.

இதோடு நூறாவது முறை சொல்கிறேன் ஐ லவ் யூ. நீங்கள் வாழ்க்கையை மிக அழகாக காட்டுகிறீர்கள். அதைவிட நீங்கள் நீங்களாக இருப்பது இன்னும் அழகாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவைப் பார்த்த மாதவன் பிரியா பவானி சங்கருக்கு நன்றி தெரிவித்து பதிவை பதிவிட்டுள்ளார்.