Priya Bhavani Shankar in Kuruthi Aattam
Priya Bhavani Shankar in Kuruthi Aattam

ஊரடங்கிற்கு நடுவிலும் பிரபல நடிகரின் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார் பிரியா பவானி சங்கர்.

Priya Bhavani Shankar in Kuruthi Aattam : செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அதன் பின்னர் சின்னத்திரை சீரியல் நடிகையாக பயணத்தைத் தொடங்கியவர் பிரியா பவானி சங்கர்.

விவரம் தெரியாமல் பேசிய சூர்யா ரசிகர்.. பதிலடி கொடுத்த சரத்குமார் – ட்விட்டரில் பரப்பை கிளப்பிய பதிவு!

இவர் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து இருந்தார். அதன்பிறகு வைபவ் நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

பின்னர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு மாபியா, மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

மேலும் பொம்மை, இந்தியன்2, குருதி ஆட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தனுஷ் பட டயலாக்கிற்கு செமையா டிக் டாக் செய்த பிரியா பிரகாஷ் வாரியர் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

குருதி ஆட்டம் என்ற படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரியா பவானி சங்கர் தற்போது தன்னுடைய டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார்.

இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.