Prasanna About Thupparivaalan 2
Prasanna About Thupparivaalan 2

மிஸ்கின் இல்லாத துப்பறிவாளன் 2 எப்படி இருக்குமென பிரசன்னா கூறியுள்ளார்.

Prasanna About Thupparivaalan 2 : தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனரான மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் துப்பறிவாளன்.

நீண்ட நாட்களாக மாறாத விஜய்யின் ரிங்டோன், அதுவும் அஜித் பாட்டு, என்ன பாட்டு தெரியுமா? – பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்.!

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த நிலையில் விஷாலுக்கும் மிஸ்கின் இற்கும் மேற்பட்ட வாய்க்கா தகராறில் மிஸ்கின் இப்படத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.

மேலும் துப்பறிவாளன் 2 படத்தை நானே இயக்க இருப்பதாக விஷால் அறிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று ரசிகர்களுடன் உரையாடிய பிரசன்னாவுடன் ரசிகர் ஒருவர் மிஸ்கின் இல்லாத துப்பறிவாளன் 2 எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு பிரசன்னா மிஸ்கின் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. விஷாலை இயக்குனராக பார்த்ததில்லை இருப்பினும் இந்த படத்தை சிறப்பான படமாக கொடுப்பார் என நம்புகிறேன். அவரிடம் நிரூபிக்கப்பட வேண்டிய திறமைகள் நிறைய உள்ளது எனக் கூறியுள்ளார்.