Powder Teaser Release Update

ஜனவரி 26இல் வலிமையுடன் வருகிறோம் என பவுடர் படக்குழு டீஸர் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Powder Teaser Release Update : தமிழ் சினிமாவின் தாதா87 என்ற திரைப்படத்தை இயக்கி திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் விஜய் ஸ்ரீ.

இத்திரைப்படத்தை தொடர்ந்து இவர் விக்ரமின் மருமகன் அர்ஜுமன் நாயகனாக நடிக்கும் பொல்லாத உலகில் பயங்கர கேம் பப்ஜி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பழைய நடிகர் அம்ச வரதனை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் பவுடர் என்ற திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். இந்த படத்தில் நாயகியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் டீசர் வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதிலும் ஸ்பெஷல் என்னவென்றால் இந்த டீசரை வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிடுகிறார். இதனால் வலிமையுடன் ஜனவரி 26இல் வருகிறோம் என படக்குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.