போனி கபூர் மற்றும் பல பிரபலங்கள் வெளியிட்ட பவுடர் பட டீசர் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.
Powder Movie Official Teaser : தமிழ் சினிமாவின் தாதா87 என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் விஜய் ஸ்ரீஜி. இந்த படத்தை தொடர்ந்து பொல்லாத உலகின் பயங்கர கேம் பப்ஜி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
வேலு வித்யா பிரதீப் நாயகியாக நடிக்க மக்கள் தொடர்பாளரான நிகில் முருகன் போலீஸ் அதிகாரியாக நடித்துவரும் பவுடர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் டீசர் குடியரசு தினமான இன்று போனிகபூர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட பல பிரபலங்களால் வெளியிடப்பட்டுள்ளது.
மிரட்டலாக உருவாகியுள்ள இந்த டீசர் இணையத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.