வேலவன் ஸ்டோர்ஸில் கலக்கலாக ஷாப்பிங் செய்துள்ளார் மாஸ்டர் பூவையார்.

Poovaiyar Shopping in Velavan Stores : தூத்துக்குடி மாவட்டத்தில் வேலவன் ஹைப்பர் மார்க்கெட் என்ற பெயரில் இயங்கி வரும் கடைக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உண்டு. காரணம் ஆடை, ஆபரணங்கள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் மிகக் குறைந்த விலையில் தரமாக கிடைப்பது தான்.

தூத்துக்குடி மக்களிடம் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சென்னையில் திநகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் ஏழு அடுக்கு தளத்துடன் வேலவன் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் புதிய கிளை தொடங்கப்பட்டுள்ளது. இங்கும் அனைத்தும் மிகவும் குறைந்த விலையில் தரமாக கிடைப்பதால் மக்களிடம் மிகப் பெரிய ரீச் கிடைத்துள்ளது.

சாதாரண மக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்களின் ஃபேவரைட் கடையாக மாறியுள்ளது. அர்ச்சனா, தீபா, மணிமேகலை, ஷிவாங்கி, மாபக ஆனந்த், ஜெனிபர், ஜாக்குலின், புகழ், பாலா என பலர் இந்த கடையில் ஷாப்பிங் செய்தனர்.

இவர்களை தொடர்ந்து விஜய் டிவி மூலம் புகழ் பெற்று மாஸ்டர், பிகில் உள்ளிட்ட படங்களில் விஜயுடன் இணைந்து நடித்த பூவையார் ஷாப்பிங் செய்துள்ளார். கலக்கல் சினிமா தொகுப்பாளருடன் இணைந்து அவர் ஷாப்பிங் கலாட்டாவை பாருங்க