சன் பிக்சர்ஸ் நிறுவனம் கெஞ்சிக் கேட்டதையடுத்து பூஜா ஹெக்டே செய்த வேலை தற்போது தெரிய வந்துள்ளது.

Pooja Hegde Reduces Salary for Thalapathy 65 : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைக்க உள்ளார். தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்த படத்தின் பூஜை கடந்த வாரம் நடந்து முடிந்திருந்த நிலையில் தற்போது ஜார்ஜியாவில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்காக பூஜா ஹெக்டே 3.5 கோடி சம்பளமாக கேட்டிருந்தார்.

ஆனால் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அவரிடம் கெஞ்சிக் கேட்க ரூபாய் 3 கோடியாக குறைத்துக் கொண்டுள்ளார். இதுவரை பூஜாவிற்கு 3.5 கோடி சம்பளம் என பேசப்பட்டு வந்த நிலையில் அவர் 3 கோடி தான் வாங்குகிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.