தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Pooja Hegde in Thalapathy 65 : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தில் நடிக்க உள்ளார்.

இத்திரைப்படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்க அனிருத் இசையமைக்க உள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்க உள்ளன. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் விஜயுடன் தளபதி 65 படத்தில் ஜோடி சேரப் போவது பூஜா தான் என உறுதி செய்துள்ளது.

தளபதி 65 படத்திற்காக பூஜாவின் சம்பளமாக ரூபாய் 3.5 கோடி கொடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.