Pooja Hegde About Thalapathy 65

தளபதி விஜயுடன் நடிக்க காத்து கொண்டிருப்பதாக நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

Pooja Hegde About Thalapathy 65 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் பரவியது.

இதுகுறித்து தற்போது பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டி ஒன்றில் தமிழில் மீண்டும் நடிக்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். விஜயுடன் இணைந்து நடிக்க ஆசையாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் தளபதி 65 படத்தில் இது நடந்தால் மிகுந்த மகிழ்ச்சி கொள்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பூஜா ஹெக்டே தமிழில் எட்டு வருடங்களுக்கு முன்னர் வெளியான முகமூடி படத்தில் நாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.