YouTube video
ஜே ஜே பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பார்த்திபன், பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகியுள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Ponmagal Vanthaal Movie Selfie Review :

படத்தின் கதைக்களம் :

2004 ஆண்டு ஊட்டியில் 5 குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல் மேலும் 2 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

இந்த கொலைக்கு காரணம் சைக்கோ கொலையாளி ஜோதி என்ற பெண்மணி தான் காரணம் என போலீசார் கூறுகின்றனர்.

அவர் குழந்தைகளை கடத்தியதை தடுக்க சென்றதால் தான் அந்த இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். ஜோதி என்பவர் பொலிசாரால் கொல்லப்படுகின்றார்.

கொலையாளி எனப்படும் ஜோதி உண்மையில் கொலையாளி அல்ல என்பதால் பாக்கியராஜ் முடிந்துபோன இந்த வழக்கை மீண்டும் கிளறுகிறார்.

பாக்யராஜின் மகளான வெண்பா ( ஜோதிகா ) வழக்கறிஞர் ஆவார். தன்னுடைய முதல் கேஸாக இந்த வழக்கில் அவர் வாதாடுகிறார். குற்றவாளி எனக் கூறப்படும் ஜோதி நிரபராதி என ஜோதிகா வாதாடுவதால் அவருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்புகிறது.

ஒரு கட்டத்தில் ஜோதிகா இந்த வழக்கில் குற்றவாளி எனக் கூறப்படும் ஜோதியின் மகள் என கூறுகிறார். அதன் பின்னர் இந்த வழக்கில் என்னவெல்லாம் நடக்கிறது? இறுதியில் உண்மை எப்படி வெளிப்படுகிறது? என்பது தான் படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

ஜோதிகா தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கியதில் இருந்தே படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவருகிறார்.

அந்த வகையில் தற்போது இந்த படத்தில் வழக்கறிஞராக மிரட்டியுள்ளார். போராடி ஜெயிக்க இது கேம் அல்ல நீதி என அவர் பேசும் வசனங்கள் அற்புதம்.

மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கிறார் வடிவேலு.! – உற்சாகத்தில் ரசிகர்கள்

மற்ற நடிகர்களின் நடிப்பு :

பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தில் நடித்துள்ள அத்தனை பேரும் அவர்களின் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரதாப் போத்தன் நீதிபதியாக எதார்த்தமான நடிப்பை பார்த்திபன் ஜோதிகாவை எதிர்த்து வாதாடும் வழக்கறிஞராக அழகான நடிப்பை பதிவு செய்துள்ளார்.

அதேபோல் பாக்யராஜ் ஜோதிகாவின் அப்பாவாகவும் தியாகராஜன் அரசியல் செல்வாக்கு உடைய மனிதராகவும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.‌

தொழில்நுட்பம் :

இசை :

96 படத்துக்கு இசையமைக்க இருந்த கோவிந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் கதைக் களத்திற்கு அவரது இசை கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.

பாடல்கள் அனைத்தும் படத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத அளவில் அமைந்துள்ளன.

ஒளிப்பதிவு :

ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் அழகாகவும் தெளிவாகவும் படம் பிடித்துள்ளார்.

எடிட்டிங் :

ரூபனின் எடிட்டிங் கனகச்சிதம். படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக இணைத்து கொடுத்துள்ளார்.

இயக்கம் :

ஜே ஜே பெட்ரிக் சமுதாயத்திற்கு தேவையான ஒரு கதை களத்தை கையில் எடுத்து கதாபாத்திரங்களுக்கு சரியான நடிகர்களை தேர்ந்தெடுத்து அழகான கோர்வையாக இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.

க்ளைமேக்ஸ் காட்சிகள் நம்மை கலங்க வைக்கின்றன.

தம்ப்ஸ் அப் :

1. ஜோதிகாவின் நடிப்பு
2. பார்த்திபன், பாக்கியராஜ், பிரதாப் போத்தன், தியாகராஜன், பாண்டியராஜன் என படத்தில் நடித்துள்ள இயக்குனர்களின் எதார்த்தமான நடிப்பு.
3. கிளைமாக்ஸ் காட்சி
4. இசை
5. படத்தில் சொல்லப்படும் கருத்து

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.