Pongal 2019

Pongal 2019 : பொங்கல் ரேஸில் மொத்தம் ஆறு தமிழ் படங்கள் ரிலீசாகி மோத இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீசாகி வருகின்றன. குறிப்பாக பண்டிகை நாட்கள் என்றால் பெரிய பட்ஜெட் படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கும்.

அந்த வகையில் இந்த வருட பொங்கலுக்கு ரிலீஸ் என பல படங்கள் வரிசை கட்ட தொடங்கி விட்டன. அவை என்ன என்னென்ன படங்கள் என்பதை இப்போது பார்க்கலாம்.

விஸ்வாசம் :

தீபாவளிக்கே வெளியாக வேண்டிய படம். படப்பிடிப்புகள் நிறுவடையாததால் பொங்கல் ரிலீஸுக்கு தள்ளி போனது. நிச்சயம் இப்படம் பொங்கலுக்கு வெளியாகி விடும் என படக்குழுவினர் அறிவித்து விட்டனர்.

பேட்ட :

ஒரு வருடத்திற்குள்ளேயே அடுத்தடுத்து 3 படங்கள் ரிலீஸ் செய்ய வேண்டாம். எதிர்பார்ப்பு குறைந்து விடும் என தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியும் சன் பிக்சர்ஸ் பொங்கலுக்கு ரிலீஸ் செய்தே தீருவோம் என பேட்ட ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டனர்.

வந்தா ராஜாவாக தான் வருவேன் :

சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வந்தா ராஜாவாக தான் வருவேன் என்ற படமும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இதனை சிம்புவே அறிக்கை ஒன்றின் மூலம் உறுதிபடுத்தி இருந்தார்.

LKG :

ஆர்.ஜே பாலாஜி நடித்து வரும் LKG படமும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இதனை ஆர்.ஜே பாலாஜி ட்விட்டர் பக்கத்தில் விசுவாசமான பேட்ட ரசிகர்களே உங்கள் காண பொங்கலுக்கு வரோம் என கூறி ட்வீட் செய்திருந்தார்.

வாட்ச் மேன் :

ஜி.வி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் வாட்ச் மேன் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டம் தீட்டி வருகின்றனர்.

இதுவரை 5 பாடங்கள் பொங்கல் ரிலீஸ் என அறிவித்துள்ளன. இன்னும் சில படங்கள் அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இறுதியில் ஒன்று அல்லது இரண்டு படம் மட்டும் தான் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்பது மட்டும் தான் உண்மை.

எந்தெந்த படங்கள் இறுதி நேரத்தில் பொங்கல் ரேஸில் இருந்து விலகி கொள்கின்றன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.