Pommukutty Ammavuku Serial Update

விஜய் டிவியில் இன்று முதல் வேலைக்காரன் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியுள்ள நிலையில் பிரபல சீரியல் ஒன்றுக்கு எண்டு கார்ட் போடப்பட்டுள்ளது.

Pommukutty Ammavuku Serial Update : தமிழ் சின்னத்திரையில் பிரபல சேனல்களில் ஒன்று விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன.

புதிதாக சில சீரியல்களை தொடங்கி வருகின்றனர். அந்த வகையில் இன்று முதல் வேலைக்காரன் என்ற சீரியல் விஜய் டிவியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்றான பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியலுக்கு எண்டு கார்ட் போட்டுள்ளனர்.

பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியலில் நடித்த நடிகர்கள் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். இதனால் பொம்முக்குட்டி அம்மாவுக்கு சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.