police
தமிழக போலீசார் கடற்கரை மனதில் படுத்து உறங்கும் புகைப்படம் வெளியாகி பலரின் மனதையும் உருக செய்துள்ளது.

Police sleeping in the seashore viral picture – அமைச்சர், முதலமைச்சர், பிரதமர், மற்ற நாட்டு அதிபர்கள் என முக்கிய அரசியல் தலைவர் மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் என யார் வந்தாலும் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்படும் போலீசாரின் பங்கு அளப்பரியது. முதல்வர் வருதவற்கு பல மணிநேரங்கள் முன்பே ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால் கடுக்க நிற்க வேண்டும். ஓய்வெல்லாம் எடுக்க முடியாது. முதல்வர் சென்ற பின்னரே அவர்கள் அந்த இடத்தை விட்டு செல்வார்கள். இது காவலர் பணி. இதில் பெண் காவலர்களும் அடக்கம்.

முதல்வருக்கே இப்படியெனில் பிரதமர் உள்ளிட்ட பெரிய தலைவர்கள் வந்தால் சொல்லவே தேவையில்லை. 2 நாட்கள் காவலர்கள் படாத பாடு படுவார்கள். பிரதமர் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு விமானம் ஏறிய பின்னரே அவர்கள் பெருமூச்சு விடுவார்கள். பிரதமரின் கார் பயணிக்கும் போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு காவலர்களே பொறுப்பு. அதனால் முக்கிய விவிஐபிக்கள் திரும்பி செல்லும் வரை பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டிருக்கும் காவலர்கள் பதட்டத்துடனே இருப்பார்கள்.

சீன அதிபர் ஜின் பிங் மற்றும் பிரதமர் மோடி இருவரும் நேற்று சென்னை வந்தனர். எனவே, நேற்று முன்தினம் இருந்தே தமிழக காவலர்களின் பாதுகாப்பு பணி தொடங்கியது. சென்னை விமான நிலையத்தில் இருந்து பழைய மகாபலிபுரம் சாலை, மாமல்லபுரம் வரை ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இதில், நேற்று முன் தினம் இரவு கடற்கரை மண்ணிலேயே பலரும் படுத்து உறங்கினார். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்ட நெட்டிசன்கள் ‘ சிறிது நேரம் ஓய்வெடுங்கள் நீங்களும் நாளைக்கும் கால்கடுக்க நிற்க வேண்டும்’ என பதிவிட்டுருந்தனர்.