police
சைக்கிளில் வரும் சிறுவனை காவல் அதிகாரி ஒருவர் தடுத்தி நிறுத்தும் வீடியோ தொடர்பாக காவல்துறை தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

Police explain reason behind viral cycle video – தற்போது ஹெல்மெட் அணியாமல் செல்வது.. குடித்து விட்டு வாகன ஓட்டுவது.. லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டுவது போன்ற போக்குவரத்து விதிமீறல்களுக்கு மிக அதிகப்படியான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே நாடெங்கும் இதை கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒத்த செருப்பை விளம்பரப்படுத்த ரசிகர் கொடுத்த சூப்பர் ஐடியா – பாராட்டிய பார்த்திபன்

இந்நிலையில், சைக்கிளில் சென்ற ஒரு சிறுவனை ஒரு காவல் அதிகாரி வழிமறித்து ஓரிடத்தில் நிற்க வைக்கும் வீடியோ இன்று காலை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதைக்கண்ட நெட்டிசன்கள் அடப்பாவிங்களா.. இதுதான் உங்க சட்டமா?.. இப்படி சைக்கிளில் வந்த சிறுவனிடத்திலெல்லாம் அபராதம் விதிப்பீர்களா? என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலரோ, ஹெல்மெட் அணியாமல் சென்றதால் சிறுவனுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறினர்.

இந்த சம்பவம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சைக்கிளில் இரு கைகளையும் விட்டு விட்டு சிறுவன் வேகமாக வந்ததால் அவனை எச்சரிக்கும் வகையிலேயே அதிகாரி நடந்து கொண்டார் என விளக்கம் அளித்துள்ளனர். சிறுவனை சுமார் ஒரு மணி நேரம் அந்த அதிகாரி நிற்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.