PM Modi Wishes to Covai Student : “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்” போட்டியில் இணைய வாயிலாக மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அதில் கோவையை சேர்ந்த ஸ்வேதா மற்றும் குந்தன் ஆகியோர் பிரதமரிடம் நேரடியாக உரையாடினார். அதில் அவர்கள் கூறியதாவது:

கோவையை சேர்ந்த மாணவி ஸ்வேதா, தனது படைப்பு குறித்து பிரதமரிடம் விளக்கினார். தடுப்பணைகளின் அடிப்படை தொழில்நுட்பம் குறித்தும் தடுப்பணைகள் எதனால் உடைகின்றன, தடுப்பணைகள் பலவீனமாக இருப்பதைக் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதன் மூலம் நேரவிருக்கும் இடர்களை தடுப்பது தொடர்பாகவும் தான் உருவாகிவரும் படைப்பை பற்றி பிரதமர் விவரித்தார்.

விஜய்யின் அடுத்த அதிரடி : வறுமையில் வாடும் ரசிகர்களின் வங்கி கணக்கிற்கு நேரடி நிவாரண நிதி – ஆதாரத்தை வெளியிட்ட ரசிகர்கள்.!

அதை ஆர்வத்துடன் கேட்டார் பிரதமர் மோடி, இந்தத் திட்டத்தை மக்களின் உண்மையான வாழ்க்கை பிரச்சினைக்கு தீர்வு காணுவது ஆக இருப்பதாக கூறி, அவரை பாராட்டினார். மேலும் இது தொடர்பான ஒரு மாதிரியை உருவாக்கி மத்திய நீர் ஆணையத்தின் அனுப்புமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து பி.எஸ்.ஜி கல்லூரி மாணவன் குந்தன், பாதிக்கப்படும் மக்கள் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க செல்ல தயங்குவதால், அதற்கு உதவும் வகையில் போலீசாருடன் நேரடியாக தொடர்பு கொண்டு தங்கள் பிரச்சினைகளை கூறும் வகையில் உருவான மென்பொருளை உருவாக்கி உள்ளதாக கூறினார்.

அதை தொடர்ந்து பிரதமர் மோடி, இந்த மென்பொருளை, அந்தந்த மாநில மக்கள் தங்கள் தாய்மொழியில் மேற்கொள்ள வழி உள்ளதா? என்று கேட்டறிந்தார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.