Pizhai
ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில் தாமோதரன் தயாரிப்பில் மைம் கோபி, சார்லி, சின்ன காக்கா முட்டை, ஜார்ஜ் மரியன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிழை.

படத்தின் கதைக்களம் :

ஒரு ஊரில் வறுமையான குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்கள் உள்ளனர், இவர்கள் செய்யும் தவறுகளுக்காக பெற்றோர்கள் அடித்து உடைத்து இவர்களை மாற்ற முயல்கின்றனர்.

இந்த நேரத்தில் பெற்றோர்களை விட்டு சென்னை ஓடிய இளைஞர் ஒருவர் நல்ல செல்வாக்குடன் ஊருக்கு வருகிறார். இவரை பார்த்து இந்த மூன்று சிறுவர்களும் சென்னை ஓடி விடுகின்றனர்.

அதன் பின்னர் இவர்களின் வாழ்க்கையில் நடந்தது என்ன? இறுதியில் என்னவானார்கள் என்பதை சமூக சிந்தனையுடனான கருத்தை சொல்வது தான் இப்படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

மைம் கோபி, சார்லி, ஜார்ஜ் மரியன் என படத்தில் நடித்துள்ள அனைவரும் அவர்களின் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர். குறிப்பாக மூன்று சிறுவர்களும் அழகான நடிப்பால் நம்மை கவர்கின்றன.

தொழில் நுட்பம் :

இசை :

FS பைசல் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பாடல்கள் ரசிக்கும்படி உள்ளது.

ஒளிப்பதிவு :

பக்கின் ஒளிப்பதிவு தெளிவு

எடிட்டிங் :

ராம் கோபியின் எடிட்டிங் கனகச்சிதம்.

இயக்கம் :

திருத்தப்பட வேண்டிய பிழைகளை மிக அழகாகவும் அழுத்தமாகவும் தெளிவாகவும் கூறியுள்ளது பாராட்ட வேண்டிய விதத்தில் அமைந்துள்ளது.

மொத்தத்தில் பிழை ஒவ்வொரு மாணவரும் பார்க்க வேண்டிய படம்.

REVIEW OVERVIEW
பிழை விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
pizhai-movie-reviewமொத்தத்தில் பிழை ஒவ்வொரு மாணவரும் பார்க்க வேண்டிய படம்.