தன் பட இயக்குனரை தொடர்ந்து தன்னுடைய வீட்டில் ஒருவரையும் பரி கொடுத்துள்ளார் நடிகை பியா பாஜ்பாய்.

Pia Bajbai Brother Death : தமிழ் சினிமாவில் கோ திரைப்படத்தில் நடித்திருந்தவர் பியா பாஜ்பாய். இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். இருந்தாலும் கோ படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களை என்றைக்கும் மறக்காத இடத்தில் நிற்க வைத்துள்ளது.

தமிழ் மொழியின் சில படங்களில் மட்டுமே நடித்து வந்த மற்ற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய சகோதரர் இறந்து விட்டதாக கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் நடித்த கோ படத்தின் இயக்குனர் கே வி ஆனந்த் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தன்னை தமிழில் முதல்முறையாக இயக்கிய இயக்குனரை பறிகொடுத்த சோகத்தில் இருந்த பியா பாஜ்பாய் மேலும் ஒரு சோகமாக அவருடைய சகோதரரை பறி கொடுத்துள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் பியா பாஜ்பாய்க்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.