Petta Review

Petta Review : சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, நவாஸுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சசிகுமார் ஆகியோரின் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போடும் படம் பேட்ட.

கதைக்களம் :

ஒரு கல்லூரியில் ஹாஸ்டல் வார்டானாக பணி புரிந்து வரும் ரஜினிகாந்த் அந்த கல்லூரியில் பாபி சிம்ஹாவால் அரங்கேறும் அராஜகத்தை ஒடுக்குகிறார். மேலும் இதே கல்லுரியில் பயின்று வரும் மேகா ஆகாஷை அன்வர் என்பவர் காதலித்து வருகிறார்.

இவர்களது காதலுக்கு உதவ போய் ரஜினிக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதே போல் பிளாஷ் பேக் கதையில் சசிகுமாரின் காதலுக்கு உதவ போய் அங்கும் பிரச்சனையில் சிக்கி கொள்கிறார்.

இவைகளில் இருந்து எப்படி வெளியேறினார்? வில்லன்களை எப்படி ஒழித்து கட்டுகிறார் என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் :

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பு அபாரம். மீண்டும் அவரை இளமையான தோற்றத்தில் செம மாஸாக ரசிகர்கள் எதிர்பார்த்தபடி காட்டியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

நவாஸுதீன் சித்திக் :

இப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்து மிரட்டியுள்ளார் நவாஸுதீன் சித்திக். மற்றவர்களின் நடிப்பை தூக்கி சாப்பிட்டு விட்டார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

விஜய் சேதுபதி :

விஜய் சேதுபதி தனக்கான ரோலை செம கட்சிதமாக நடித்து கொடுத்துள்ளார். ரஜினியுடன் இணைந்து நடித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாபி சிம்ஹா :

பாபி சிம்ஹாவிற்கு இப்படத்திற்கு பெரிய அளவிலான கதாபாத்திரம் இல்லை என்றாலும் தனக்கான ரோலை ஸ்மார்ட்டாக முடித்து கொடுத்துள்ளார்.

குரு சோம சுந்தரம் :

ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் திறமையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த குரு சோம சுந்தரம் இப்படத்தின் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

சசிகுமார் :

சசிகுமார் ரஜினிக்கு நண்பனாக நடித்துள்ளார். இவருடைய காட்சிகள் ப்ளாஷ்பேக்கில் தான் இடம் பெறும். அதுவும் சரியாக அமைந்து படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

சிம்ரன், த்ரிஷா :

சிம்ரன், த்ரிஷா என இருவருக்கும் படத்தில் பெரிய அளவில் முக்கியதுவம் இல்லை. ஆனாலும் கியூட்டான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். சிம்ரனின் நடனம் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது.

தொழில்நுட்பம் :

இசை :

அனிருத்தின் இசை, பாடல்கள் அனைத்தும் பக்கா. பின்னணியில் இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாமோ என என்ன தோன்றுகிறது.

எடிட்டிங் :

விவேக் ஹர்ஷனின் எடிட்டிங் பிரமாதம்

ஒளிப்பதிவு :

திரு அவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு மிக பெரிய பலமாக அமைந்துள்ளது.

தம்ப்ஸ் அப் :

1. ரஜினியின் நடிப்பு
2. கார்த்திக் சுப்புராஜின் இயக்கம்
3. நவாஸுதீன் சித்திக் நடிப்பு

தம்பஸ் டவுன் :

1. பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் என பலருக்கும் கதாபாத்திரங்களில் முக்கியத்துவம் இல்லாதது.

Petta Movie Review | Rajinikanth | Vijay Sethupathi | Simran | Tamil Cinema | Kalakkal Cinema