Petta Release Info : பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்த பேட்ட ரிலீஸ் தள்ளி போகிறதா? கார்த்திக் சுப்புராஜ் ட்வீட் மூலம் விளக்கம்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காரத்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட.
இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது என படக்குழுவினர் அறிவித்து இருந்தனர். இதே தினத்தில் தான் அஜித்தின் விஸ்வாசம், சிம்புவின் வந்தா ராஜாவாக தான் வருவேன் ஆகிய படங்களும் ரிலீசாக உள்ளன.
இதனால் பேட்ட படத்தின் ரிலீஸ் ஜனவரி 26-ம் தேதிக்கு தள்ளி போவதாக நேற்று தகவல்கள் வைரலாகி இருந்தன.
அதன் பின்னர் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 9-ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இதனை ட்விட்டரில் பதிவு செய்துள்ள கார்த்திக் சுப்புராஜ் பேட்ட பொங்கல் ரிலீஸ் என்பதை மறந்து விடாதீர்கள் எனவும் டிவீட்டியுள்ளார்.
எனவே பேட்ட படம் ரிலீஸ் தள்ளி போகவில்லை. திட்டமிட்டபடி பொங்கலுக்கு தான் வெளியாகிறது என்பது உறுதியாகியுள்ளது.
Forgot to add #PettaPongal2019 !! https://t.co/z8YcfLDh5E
— karthik subbaraj (@karthiksubbaraj) November 23, 2018