Petta Release Date

Petta Release Date : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட பொங்கலுக்கு வெளியாகும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா, 2 பாயிண்ட் ஓ படங்களை தொடர்ந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார்.

அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஸுதீன் சித்திக், திரிஷா, சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த படத்தின் முதல் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இவைகளை தொடர்ந்து தற்போது மூன்றாம் லுக் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில் படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளது. இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதே பொங்கலில் தல அஜித்தின் விஸ்வாசம் படமும் வெளியாக இருப்பதால் இவ்விரண்டு படங்களுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Petta Release date

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.