சென்னை : சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 86.51 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 78.69 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை (செப்டம்பர் 28) 6மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 23 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 86.51 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 78.69 காசுகளாகவும் உள்ளது.