Petrol Diesel Rate 19.11.18

Petrol Diesel Rate 19.11.18 : பெட்ரோல், டீசல் ரேட் சமீப காலமாக உச்சத்தை தொட்டிருந்தது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். தொடர் விலை ஏற்றத்தால் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை கூறி வந்தனர்.

இதனையடுத்து கடந்த ஒரு வார காலமாக பெட்ரோல் டீசல் ரேட் கொஞ்சம் கொஞ்சமாக இறங்க தொடங்கியுள்ளது.

நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் சனிக்கிழமை நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே வியாபாரம் செய்யப்பட்டது.

இதனையடுத்து தற்போது இன்றைய விலை நிலவரமும் குறைந்தவாறே உள்ளது. பெட்ரோல் விலை நேற்றை விட ரூ 0.41 காசுகள் குறைந்து ரூ 79.46-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் டீசல் லிட்டருக்கு 0.38 காசுகள் குறைந்து இன்றைய விலையாக ரூ 75.44-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை குறைய தொடங்கி இருப்பது நடுத்தர மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் இந்த விலை குறைப்பு போதாது என்பதே ஒட்டு மொத்த மக்களின் குரலாக இருந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.