Peter Paul Vs Vanitha

மீண்டும் தன்னுடைய மூன்றாவது கணவர் பீட்டர் பாலை பார்க்கச் சென்ற வனிதாவை அவர் அடிக்கப் பாய்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Peter Paul Vs Vanitha : தமிழ் சினிமாவில் தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் வனிதா. இவர் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் ஆவார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பரபரப்புக்குறியவராக மாறினார். இவர் கடந்த ஜூன் மாதம் தங்கி யூடியூப் சேனலுக்கு பேருதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

அவருடைய முதல் மனைவி என்னை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்யக்கூடாது என்னுடைய குழந்தைகளுக்கு அப்பா வேண்டும். பீட்டர் பால் குடிக்கு அடிமையான நபர் பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என அவரைப் பற்றி பல விஷயங்களை கூறினார்.

ஆனால் மனித குலத்திலேயே பீட்டர் பால் போன்ற உத்தமரை பார்க்க முடியாது என பேசினார். அவருக்காக பிரபலங்கள் பலர் உடன் சண்டையிட்டார்.

இந்த நிலையில் சமீபத்தில் பீட்டர் பால் குடிக்கு அடிமையாகி விட்டார்.அவரை திருத்த முடியவில்லை. எலிசெபத்தே அவரை வச்சிக்கட்டும் என கூறியிருந்தார்.

இவ்வளவு பிரச்சனைகளுக்குப் பிறகு வனிதா தன்னுடைய யூடியூப் சேனலை நடத்த சிரமமாக இருப்பதால் பீட்டர் பாலை சந்தித்து சமாதானம் பேச சென்றுள்ளார்.

ஆனால் வனிதாவை பார்த்த பீட்டர் பால் கடும் கோபமடைந்து எந்த மூஞ்சிய வெச்சுட்டு இங்க வந்த?? எனக்கு தேவை என்றால் வருவ இல்லனா வீசிடுவியா?? உன்னால என் மானமே போச்சு என அவரை விளாசியது மட்டுமல்லாமல் அடிக்கவும் பாய்ந்துள்ளார் என சமூக வலைதளப் பக்கங்களில் பேசப்பட்டு வருகிறது.

விரைவில் இது குறித்தும் வனிதா ஒரு வீடியோவை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.