மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய பீட்டர் பால் வனிதா குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Peter Paul Video About Vanitha : தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். இவர் இரு மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் சமூக வலைதளப் பக்கங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி அடங்கிய நிலையில் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக பீட்டர் பால் தனியார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தற்போது உடல்நலம் குணமடைந்து வீடு திரும்பியுள்ள அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு தினங்களாக வனிதா தன்னை ஒரு அம்மா ஸ்தானத்தில் இருந்து பார்த்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
அப்போது தான் புரிந்து கொண்டேன் வாழ்க்கையில் நான் எவ்வளவு விஷயங்களை மிஸ் செய்து உள்ளேன் என தெரிவித்தார். மேலும் வனிதா இல்லை என்றால் நான் இல்லை. அவரைப் பற்றி சொல்வதற்கு வார்த்தையே இல்லை என தெரிவித்துள்ளார்.