Peter Paul Son About Vanitha
Peter Paul Son About Vanitha

வனிதாவின் வீட்டிற்குச் சென்ற பீட்டர் பால் மகன் அவர்களின் திருமணம் குறித்து பேசியுள்ளார்.

Peter Paul Son About Vanitha : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இன்னும் பிரபலமாக பேசப்பட்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டிலை வென்றார்.

அதன் பின்னர் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி அதில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த யூடியூப் சேனலுக்காக உதவி வந்த பீட்டர் பால் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் திருமணத்திற்கு பீட்டரின் முதல் மனைவி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தனக்கு விவாகரத்து கொடுக்கவில்லை அப்படி இருக்கும்போது எப்படி இரண்டாவது திருமணம் செய்யலாம் என கூறி வருகிறார்.

2020 முதல் பாதியில் அதிக வசூலைக் கொடுத்த படம், சூப்பர் ஹிட்டான திரைப்படங்கள் என்னென்ன? – முழு விவரம் இதோ!

இந்த நிலையில் பீட்டர் பால் முதல் மனைவியின் மகன் வனிதாவின் வீட்டிற்கு ஏற்கனவே ஒரு முறை சென்றுள்ளார். இதனால் அவருக்கு இந்த திருமணத்தில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை என தகவல்கள் பரவின. வனிதா அளித்த பேட்டி ஒன்றில் உங்களில் திருமணம் பற்றி பீட்டர் பாலின் மகனுக்கு தெரியும் எனவும் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் எனக்கு இந்த திருமணத்தில் உடன்பாடில்லை.

நான் வனிதாவின் வீட்டிற்கு டின்னர் சாப்பிட மட்டுமே சென்றேன், அவருடைய இரண்டாவது மகள் என்னை பார்க்க வேண்டும் எனக் கூறியதால் தான் நான் வீட்டிற்குச் சென்றேன்.

நான் சாப்பிட்டு முடித்த பிறகு வனிதா அவரது காரில் என்னை அழைத்து வந்து டிராப் செய்தார். அவ்வளவு தான் நடந்தது, திருமணம் பற்றி என்னிடம் எதையும் கூறவில்லை என கூறியுள்ளார்.

மேலும் பீட்டர் பாலின் முதல் மகன் வனிதாவை அக்கா என்று தான் அந்த பேட்டியில் அழைத்துள்ளார்.