Peter Paul 1st Wife Complaint on Vanitha
Peter Paul 1st Wife Complaint on Vanitha

வனிதா தன்னை கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விடுப்பதாக பீட்டரின் முதல் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

Peter Paul 1st Wife Complaint on Vanitha : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் வனிதா விஜயகுமார். கடந்த ஜூன் 27ஆம் தேதி தன்னுடைய யூடியூப் சேனலுக்கு உதவி வரும் பீட்டர் பால் என்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்டார்.

வனிதாவின் மகள்களே மணப்பெண் தோழியாக நின்று திருமணத்தை நடத்தி வைத்தனர். வனிதா, பீட்டர் பால் ஆகியோர் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் உதட்டோடு உதட்டை பதித்து முத்தமிட்டுக் கொண்டனர். இரண்டு வளர்ந்த மகள்களை வைத்துக் கொண்டு இந்த வயதில் இப்படியா செய்வது என இவர்களின் செயல் விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது.

தன்னை விமர்சித்த ரசிகர்களை வெறுப்பேற்றும் விதமாக வனிதா மீண்டும் ஒரு லிப் லாக் முத்தக் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

மேலும் திருமணமான கையோடு பீட்டர் பாலின் முதல் மனைவி போலீசில் புகார் அளித்திருந்தார். தன்னை விவாகரத்து செய்யாமலேயே தன்னுடைய கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என கூறியிருந்தார்.

வனிதாவின் மூன்றாவது திருமணத்திற்கும் வந்த பிரச்சனை – பீட்டர் பால் மீது போலீசில் பரபரப்பு புகார்

மேலும் வனிதா தன்னுடைய கணவரை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். இருவரும் சேர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என குற்றம் சாட்டி வருகிறார்.

ஆனால் வனிதா என்னிடம் இருந்து பணம் பறிப்பதற்காகவே பீட்டர் பாலின் முதல் மனைவி இவ்வாறு செயல்பட்டு வருகிறார். குடும்பத்தார் அவரை தூண்டி விடுகின்றனர் என கூறியுள்ளார்.

மேலும் பீட்டர் பால் முதல் மனைவி ஹெலன் ரூபாய் ஒரு கோடி கேட்டு தங்களை பிளாக்மெயில் செய்ததாகவும் வனிதா கூறியுள்ளார். இந்த பிரச்சனையை நாங்கள் சட்டரீதியாக சந்திக்க இருப்பதாகவும் வனிதா தெரிவித்துள்ளார்.

பீட்டர் பால் முதல் மனைவி செயல்பாடுகளால் எங்களின் திருமண வாழ்க்கை பாதிக்காது எனவும் வனிதா கூறியுள்ளார்.