இந்திய திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகிகள் சமந்தா அக்கினேனி, டாப்ஸி பன்னு, த்ரிஷா மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் இணைந்து கீர்த்தி சுரேஷின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமான ‘பெண்குயின்’ டீசரை வெளியிட்டனர். 

Penguin Teaser : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்தி வருகிறார்.

இவரது நடிப்பில் அடுத்ததாக பென்குவின் என்ற திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது.

குண்டா இருந்த குஷ்புவா இது?? அண்ணாத்த படத்திற்காக இப்படி மாறிவிட்டாரா?? – இந்தப் புகைப்படத்தை நீங்களே பாருங்க!

கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஈஸ்வர் கார்த்திக் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டீசர் இன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஒரு குழந்தையின் தாய் என்ற கதா பாத்திரத்திற்கு ஏற்ப உடல் ரீதியாக தன்னை மாற்றிக்கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

தற்போதே தொடங்கிய சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. 24 மணி நேரத்தில் ரசிகர்கள் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் விவரம் இதோ!

அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 19 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் மற்றும் டப்பிங்களுடன் மலையாளத்திலும் வெளியாகிறது.

தற்போது ரசிகர்கள் மத்தியில் இந்த டீசர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

திரையுலக பிரபலங்கள் பலரும் டீசரை பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.