Pavithra Lakshmi Pair With Kathir

பிகில் பட நடிகருடன் ரொமான்டிக் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பவித்ரா.

Pavithra Lakshmi Pair With Kathir : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. விளம்பரப் படங்களிலும் படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் மலையாளத்தில் ஒரு படத்தில் நாயகியாக நடித்துள்ள இவர் தற்போது தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். ஏஜிஎஸ் சினிமா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் காமெடி நடிகர் சதீஷ் இட்டு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து தற்போது பிகில் பட நடிகர் கதிர் நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தினை அறிமுக இயக்குனர் இயக்குகிறார். ரொமான்டிக் காதல் கதையாக இத்திரைப்படம் தயாராக உள்ளது.