Pavithra About Pugazh

இப்படி பண்ணா யாருக்குத்தான் புகழ் மேல கிரஸ் இருக்காது என பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் பவித்ரா லட்சுமி.

Pavithra About Pugazh : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் பவித்ரா. ஆல்பம் பாடல்களில் நடித்து வந்த இவர் தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த வாரம் தான் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இவருக்கும் புகழுக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருந்து வந்தது என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று.

தற்போது நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய இவர் லைவ் வீடியோ ஒன்றில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது புகழ் குறித்த கேள்விக்கு எப்போதும் சிரிக்க வைத்துக்கொண்டே இருந்தால் புகழ் மேல யாருக்குத்தான் இருக்காது என பதிலளித்துள்ளார்.

அதேபோல் சுனிதா குறித்த கேள்விக்கு அவர் டான்ஸராக இருந்த போது மிகவும் பிடிக்கும். தற்போது அவருடன் சமைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார்.