Pavithra About Cook With Comali

இரண்டு வாரமாக குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வராமல் ரசிகர்களை ஏமாற்றி உள்ளார் நடிகை பவித்ரா.

Pavithra About Cook With Comali : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் குக்காக பாபா பாஸ்கர், ஷகிலா, கனிமொழி, பவித்ரா, அஸ்வின் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர்.

இவர்கள் மட்டுமில்லாமல் கோமாளிகளாக புகழ், பாலா, சுனிதா, மணிமேகலை, ஷிவாங்கி என பலரும் பங்கேற்று வருகின்றனர்.

கடந்த வாரம் முதல் சீசன் போட்டியாளர்கள் இரண்டாம் சீசன் போட்டியாளர்களுடன் மோதிக் கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது குக்காக பங்கேற்று வந்த பவித்ரா கடந்த வார நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான நிகழ்ச்சிக்காக வெளியான ப்ரோமோவிலும் அவரை காணவில்லை.

இப்படியான நிலையில் தான் பவித்ரா இரண்டு வாரங்களாக தனிப்பட்ட காரணங்களால் என்னால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை.

அடுத்த வாரம் கண்டிப்பாக வருவேன் என கூறியுள்ளார். இரண்டு வாரமாக ரசிகர்களை ஏமாற்றியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.