Pattas Movie Review
துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ், சினேகா, மெஹரீன், மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பட்டாஸ். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

ஜாலியாக சுற்றி கொண்டிருக்கும் படத்தின் நாயகன் தனுசுக்கு ஒரு கட்டத்தில் தன்னுடைய அப்பா அடிமுறை என்ற கலையின் ஜாம்புவான் என தெரிய வருகிறது. அதன் பின்னர் தன்னுடைய அப்பாவையும் அந்த கலையையும் அழித்தவர்களை எப்படி பழி வாங்குகிறார்? சினேகா இந்த படத்தின் திருப்புமுனையாக எப்படி இருக்கிறார்? என்பது தான் இப்படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

தனுஷ் அப்பா வேடத்தில் துணிச்சலான நடிப்பையும் மகன் வேடத்தில் மாஸான நடிப்பையும் கொடுத்து நடிப்பின் அசுரன் நான் தான் என்பதை மீண்டும் ஒரு முறை பதிவு செய்துள்ளார்.

சினேகா படத்தின் முக்கிய திருப்புமுனையாக நடித்துள்ளார். அவரின் கதாபாத்திரம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

மெஹரீன் அழகான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனைவருமே அவர்களின் வேலைகளை சிறப்பாக முடித்து கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்பம் :

இசை :

விவேக் – மெர்வினின் இசை அசத்தல். பின்னணி இசை படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. ஜில் ப்ரோ பாடலுக்கு தியேட்டரில் ஆடாத கால்களே இல்லை. மற்ற பாடல்களும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளன.

ஒளிப்பதிவு :

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு படத்திற்கு அழகு சேர்த்துள்ளது. ஒவ்வொரு காட்சியையும் அழகாக படமாக்கியுள்ளது.

எடிட்டிங் :

பிரகாஷ் மப்புவின் எடிட்டிங் கனகச்சிதம்.

ஸ்டண்ட் :

திலீப் சுப்புராயன் மாஸ்டர் ஸ்டண்ட் தரம். சிறந்த ஸ்டண்ட் காட்சிகளை கொண்ட படமாக பட்டாஸ் நிச்சயம் இடம் பிடிக்கும்.

இயக்கம் :

துரை செந்தில் குமார் கொடி படத்தில் முதல் முறையாக தனுஷை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து நம்மை அசர வைத்திருந்தார்.

தற்போது பட்டாஸ் படத்திலும் நம்மை கவர்ந்து விட்டார். தமிழ் சினிமா எவ்வளவோ பழி வாங்கும் கதையை பார்த்து புளித்து போய் இருந்தாலும் பட்டாஸ் தனி ரகம் தான்.

அனைவரும் பிடித்த வகையில் முதல் பாதியை கலகலப்பாகவும் இரண்டாம் பாதியை விறுவிறுப்பாகவும் எதிர்பாராத கிளைமேக்ஸுடன் படத்தை கொடுத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதைக்களம்
2. மறந்து போன கலையை கதைக்களமாக எடுத்தது.
3. தனுஷ், சினேகாவின் நடிப்பு
4. இசை

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்

REVIEW OVERVIEW
பட்டாஸ் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
pattas-movie-reviewமொத்தத்தில் பட்டாஸ் தனுஷ் ரசிகர்களுக்கு தரமான பொங்கல் ட்ரீட்.