Pathu Thala Movie Shooting Update

சிம்புவின் பத்து தல படப்பிடிப்பு எப்போது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Pathu Thala Movie Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பிலும் சுசீந்திரன் இயக்கத்திலும், வெளியான திரைப்படம் ஈஸ்வரன்.

பொங்கலன்று வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து 10 தல படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியானது. இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்திலும் ஏ ஆர் ரஹ்மான் இசையிலும் இந்த திரைப்படம் உருவாக உள்ளது.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மார்ச் மாதம் நடக்கவிருக்கிறது.

இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.